குடியரசு தின விழாவில் கலைஞர் டி.வியில் நடிகர் கார்த்தி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று பார்த்தேன்.
நம் இந்திய இராணுவத்தின் பெருமைமிகு உருவாக்கமான அர்ஜூன் டேங்கை கார்த்தி ஓட்டி பார்த்து அதன் சிறப்புகளை இராணுவ உயர் அதிகாரிகளிடம் பேட்டி கண்ட நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.
நம் இந்திய இராணுவத்திடம் எத்தனையோ டேங்க்குகள் இருந்தாலும் அர்ஜூன் டேங்க் வரலாற்று சிறப்பு வாய்ந்தது.பொதுவாக இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை இந்தியா வெளிநாடுகளிலும் வாங்குகிறது,உள்நாட்டிலும் தயாரிக்கிறது
அப்படி உள்நாட்டில் இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை தயாரித்துகொடுப்பதற்கு DRDO என்ற அமைப்பு உள்ளது இவர்கள்தான் படைகளுக்கு தேவையான ஆயுதங்கள்,
தளவாடங்கள்,மற்றும் தொழில் நுட்ப உபகரனங்களில் சில ஆகியவற்றை செய்துகொடுக்கிறார்கள்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய இராணுவம் பீர்ங்கிகளை ரஷ்யா போன்ற வெளிநாடுகளில் தான் வாங்கி பயன்படுத்தி வந்த்தது.இந்த கால கட்டத்தில் நம் இந்திய வல்லுநர்களின் தீவிர முயற்ச்சியால் முழுக்க முழுக்க நம் இந்திய தொழில் நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த அர்ஜூன் டேங்க் ஆகும்.
- இது மணிக்கு 70 km வேகத்தில் செல்லும்,
- எந்த ஒரு பாதையிலும் லாவகமாக செலுத்த முடியும்,
- இயக்குவது ஒரு காரை போன்று எளிதானது,
- இதில் 12.7 mm மிஷின் கன் உள்ளது,
- சுமார் 1400 குதிரை திறன் கொண்டது,
- 450 கி மீ இலக்கை சுடும் திறன் கொண்டது,
- அனைத்து உலக நாடுகளின் சோதனையிலும் சிறப்பானது என பெயர்பெற்றது,
- 2004 ஆம் ஆண்டு நாட்டுக்கு அற்பணிக்கபட்டது,
- எந்த ஒரு தட்பவெட்பத்திலும் செயல்படக்கூடியது.
உலக நாடுகளின் மத்தியில் நம் பெருமையயை நிலைநாட்டிய.நம் விஞ்ஞானிகளுக்கு நன்றி சொல்வோம்.
இந்தியர் என்பதில் பெருமைகொள்வோம்.
1 comment:
Jai Hind!
Post a Comment