ஒரு வாசகனை ஒரே சமயத்தில் வானத்திலும் பூமியிலும்,கனவிலும் நினைவிலும்,எதிர்காலத்திலும் நிகல்காலத்திலும் பயணிக்க வைக்க கூடிய வல்லமை ஒரு நல்ல புத்தகத்திற்கும் ஒரு நல்ல எழுத்தாளருக்கும் உண்டு.
வாசிப்பனுபவம் என்பது அவ்வளவு இனிமையானதாகும். எனக்கு தெரிந்து சிலர் படிக்கும் போது தன்னையே மறந்து படிப்பதை நான் பார்த்திருக்கிறேன் (உ.ம். என் அப்பா அப்படித்தான் படிப்பார் ) எனக்கு புத்தகங்களை அறிமுக படுத்தியதே என் அப்பா தான்.நான் என் மகனுக்கு புத்தகங்களை அறிமுகபடுத்த தொடங்கி உள்ளேன்.புத்தகம் வாசிப்பதை குழந்தையிலிருந்தே நாம் பழக்க படுத்தி விட வேண்டும்.பள்ளி புத்தகங்கள் இருப்பினும் அதற்கு இணையானதே மற்ற புத்தகங்களும் என்ற எண்ணைத்தை சிறுவர்க்கு ஊட்ட வேண்டும்.
அந்த வகையில் புத்தக கண்காட்சி கடந்த ஏழு ஆண்டுகளாக வெற்றிகரமாக திருப்பூரில் நடைபெற்று வருகிறது இது எட்டாவது ஆண்டு,இந்த ஆண்டு மிக சிறந்த முறையில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது நிறைய பதிப்பாளர்கள் ஸ்டால்கள் அமைத்துள்ளனர்.மற்ற ஊர்களில் நடைபெறும் சில பிரபலமான புத்தக கண்காட்சியை போலவே திருப்பூரில் நடைபெறும் புத்தக கண்காட்சியும் தற்போது பரவலாக அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இந்த முறை நான் இரண்டு நாட்களுக்கு முன்பு நான் சென்றேன் சில புத்தகங்கள் வாங்கியுள்ளேன்
- சூடிய பூ சூடற்க- நாஞ்சில் நாடன்
- தேகம்-சாரு நிவேதிதா
- ஸீரோ டிகிரி-சாரு நிவேதிதா
- கோபல்ல கிராமம்-கி.ரா
- நான் ஏன் நாத்திகன் – பகத்சிங்
- மாயா-சுஜாதா
- சொல்லவே முடியாத கதைகளின் கதை-ஆதவன் தீட்ஷன்யா
- எழுத்தும் வாழ்க்கையும்-சுஜாதா
- கடவுளும் சாத்தானும்-சாரு நிவேதிதா …
நீங்களும் இதுவரை இல்லையென்றாலும் இனிமேல் புத்தகங்களை கொண்டாடுவோம்..
2 comments:
நல்ல பதிவு. இன்னும் தொடர்ந்து படியுங்கள், எழுதுங்கள், படித்த புத்தகத்தினை விமர்சனம் அல்லது உங்கள் பார்வையை எழுதுங்கள்.
என்னுடைய மி.மு veyilaan.ramesh@gmail.com
உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள் சரவணகுமார்.
Post a Comment