Friday, February 25, 2011

வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…

தமிழகத்தின் ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலிருந்தும்  இந்தியாவின் சில மாநிலங்களிலிருந்தும் தங்கள் வாழ்க்கைக்கான கலங்கரை விளக்கமாய் திருப்பூரை நோக்கி வந்த மக்களை என்றுமே ஏமாற்றியதில்லை இந்த ஊர்.பனியன் தொழில் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் அரவனைத்து காத்து வருகிறது திருப்பூர்.இந்தியாவுக்கே அந்நிய செலாவணியாக ஆண்டுக்கு சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாயை ஈட்டி தருகிறார்கள் இங்குள்ள மக்கள்.தென்மாவட்டங்களில் விவசாயம் தொய்வு ஏற்பட்ட காலங்களில் திருப்பூரை தங்கள் உழைப்பிடமாக கொண்டு அதில் தங்கள் வாழ்க்கையை சீர் படுத்திகொள்ள வந்த விவசாயிகளின் கண்ணீர் துடைத்தது இந்த ஊர்.

அப்படிப் பெருமை வாய்ந்த இந்த ஊர் பனியன் தொழில் இப்போது பிழைக்குமா,மரிக்குமா என்ற நிலை சாயப்பட்டரைகள் நிறுத்தப்பட்டதன் மூலம் ஏற்ப்பட்டுள்ளது.சுமார் நானகரை லட்சம் தொழிலாளர்கள் நம்பி இருப்பது பனியன் கம்பனிகளைத்தான்.

உள்நாட்டிற்கும்,வெளிநாட்டிற்க்கும் பனியன்,டி-சர்ட்,ஜட்டி உள்ளிட்டவைகளை பனியன் கம்பனிகளில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பபடுகிறது.அந்த பனியன் கம்பனிகளுக்கு தேவையான நூல் மற்றும் துணிகளை சாயமிடுவதற்க்கு சாயப்பட்டரைகள் பயன்படுத்தப்படுகிறது.அவ்வாறு சாயமிடப்பட்டு வெளியேரும் கழிவு நீர் திருப்பூரில் ஓடக்கூடுய நொய்யலாற்றில் கலந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக அதன் கரைப்பகுதியான் காங்கயம்,ஒரத்துப்பாளையம்,வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இதனை விசாரித்த நீதிமன்றம் சாயப்பட்டரைகள் தாங்கள் வெளியேற்றும் கழிவு நீரை சுத்திகரித்துதான் ஆற்றில் விடவேண்டுமென்றும் அதற்க்கு தேவையான வசதிகளை உடனே மேற்க்கொள்ள வேண்டுமென்றும் அதாவது Ro என சொல்லக்கூடிய சுத்திகரிப்பு முறையை சாயப்பட்டரைகளில் அமைத்து செயல்படவேண்டுமென்று உத்தரவிட்டது.அதற்க்கு கால நிர்ணயமும் செய்தது.

ஆனால் அது மிகவும் செலவு வைக்ககூடியதும் செயல்படுத்த காலம்போதாது எனவும் கூறி சாயப்பட்டரை உரிமையாளர்கள் பதில் மனு தாக்கல் செய்தனர்.இதனை ஏற்று நீதிமன்றமும் காலநீட்டிப்பு கொடுத்தது.ஆனால் அப்படியும் சில நிறுவனங்களால் மட்டுமே குறிப்பிட்ட தேதிக்குள் அதை செயல்படுத்தமுடிந்தது.மற்ற நிறுவனங்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடி மேலும் காலநீட்டிப்பும்,மத்திய மாநில அரசுகளின் உதவியையும்நாடினர் ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அரசு இயந்திரம் அசையவில்லை அதேசமயம் நீதிமன்றமும் காலநீட்டிப்பு தர மறுத்ததோடு,சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத நிறுவனங்களை நிறுத்துமாறும் உத்தரவிட்டது.எனவே சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத நிறுவனங்கள் தற்போது மூடப்பட்டுள்ளது.

இதனால் துணிகளுக்கு சாயமேற்றம் செய்ய முடியாமல் பனியன் நிறுவனங்கள் தற்போது எடுத்த ஆர்டர்களை முடிக்கமுடியாமலும் திணறுகின்றன.பெரும்பாலான கம்பனிகளில் பாதிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இல்லை.இதில் சரிபாதி ஊழியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.பனியன் கம்பனிகளும் சாயப்பட்டரைகளுக்கு ஆதரவாக தினம் ஒரு போராட்டமும்,வாரத்திற்க்கு ஒருநாள் முழுஅடைப்பு நடத்தி அரசின் கவனத்தை திருப்ப முயற்ச்சி எடுத்து வருகின்றன.

இப்படியே போனால் திருப்பூரே வேலை இல்லமால் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகும்.எனவே சம்பந்தப்பட்ட அரசுகள் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வை எட்டி பனியன் தொழிலையும் தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டும்.item_032000047002_348_314

Wednesday, February 23, 2011

ரிலாக்ஸ் பக்கம்….கொஞ்சம் சி[ரி]ப்ஸ்

3330_main_image_1243961876தொண்டர்1: தலைவரை ஐபிஎல் மேட்ச் பார்க்க  கூப்பிட்டுப்போனது     தப்பாபோச்சு…

தொண்டர்2: ஏன்?

தொண்டர்1: சீயர்ஸ் கேர்ள்ஸை தேர்தல் பிரச்சாரத்திற்க்கு கூப்பிட்டுப்போலாமானு கேக்குறார்…

 

சேவகன்:மன்னர் ரொம்ப வருத்தத்தில் இருக்காறா ஏன்?

சேவகன்2:நீங்கெல்லாம் ராசா வா இருந்து என்னத்த கிழிச்சீங்கன்னு ராணி  கேட்டுட்டாங்களாம்….

 

ஒருவர்: அந்த அமைச்சரை பதவியிலிருந்து ஏன் தூக்கிட்டாங்க?

மற்றவர்: ஊழல்னா என்னானு கேட்டாராம்….

 

நபர்1 :என்ன அந்த கட்சில இருந்து இந்தகட்சிக்கு  இவ்ளோபேர் மாறுறாங்க?

நபர்2 :அதுவா அவங்க அந்த கட்சில இருந்த பதவிய மாத்தாம இந்தகட்சியில சேரலாம் பார்ட்டி போர்ட்டபிளிட்டியாம்….

 

நிருபர்: மிஸ், காதலருக்கும் கணவருக்கும் என்ன வித்தியாசம்

இளம்பெண்: ஏடிஎம் கார்டுக்கும் வாஷிங்மிசினுக்கும் உள்ள வித்தியாசம்தான்….

நிருபர்:????!!!!………….

Sunday, February 20, 2011

கானலும் காதலும்….

green-nature-wallpaperபடகுத்துறை படிக்கட்டுகளில் உன் பாதச்சுவடு  பார்த்ததாய் பறைசாற்றியது மீன் குஞ்சொன்று!

ஆவாரம் பூ  காட்டில் பூக்கள் கிள்ளிய தடயம்!

அடுத்த அலைக்காக தன்னைக்  காயவைத்து காத்திருக்கும் கறை!

புற்கள் பாத அழுத்தம் பட்டும் மறுநாளுக்கு காத்திருக்கிறது!

தெய்வம் வந்து நடனமாட காத்திருக்கும்  சித்திரை சபை!

கானகமெங்கும் கைகாட்டி பலகை இருந்தும் வந்தடையவில்லை நீ !!!                                     

Thursday, February 17, 2011

ஒரு ’குட்டி’க்கதை……..உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா

அந்த நாட்டின் எல்லையில் இருந்த ஒரு காட்டில் ஒரு ஆசிரமம் இருந்தது அதை முனிவர் ஒருவர் நிர்வகித்து வந்தார்.அங்கு பல தேசங்களிலிருந்தும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கல்வி உள்ளிட்ட கலைகளை கற்பதற்காக சேர்த்து விடிருந்தனர்.

முனிவரும் தனக்கு தெரிந்த கலைகளையும் திறம்பட சொல்லிக்கொடுத்தார்.மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு கலையில் சிறந்து விளங்கினர்.Blackwhite writing personal story

பாடங்களும்,பயிற்ச்சிகளும் நிறைவு பெறும் தருணம் வந்தது, முனிவர் மாணர்கள் அனைவரையும் அழைத்தார்,

         ’மாணவர்களே உங்களுக்கு இந்தவார இறுதியுடன் பாடங்கள்,பயிற்ச்சிகள் நிறைவடைய இருக்கிறது,இறுதியாக உங்களுக்கு ஒரு அதிர்ஷ்ட மந்திரம் ஒன்றை சொல்லிக்கொடுக்கிறேன் அது ஒரு புதிர் அதற்கு விடை கண்டுபிடித்தால் அந்த மந்திரம் வேலைசெய்யும்.அந்த மந்திரம் உங்களிடம் இருந்தால் உங்களை யாராலும் வெல்லமுடியாது,ஆனால் அந்த புதிருக்கு விடை என்னிடம் இல்லை.

அது நம் ஆசிரமத்திற்க்கு பின்புறம் உள்ள மலையின் உச்சியில் ஒரு குகை உள்ளது அந்த குகைக்குள் ஒருவர் இருக்கிறார் அவரிடம் இருக்கிறது,இதில் முக்கியமான் விஷயம் என்னவென்றால் அவர் குகையிலிருந்து வெளியில் வரும்போது,அவரிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்க்க முடியும்,அதற்க்கு பதில் சொல்லியவுடன் மறைந்து விடுவார்,அதை நீங்கள் நன்கு ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்’

அந்த விடையை யார் முதலில் என்னிடம் வந்து சொல்கிறீர்களோ அந்த மாணவனுக்கு அந்த மந்திரத்தின் சூத்திரம் சொல்லித்தருவேன்”என்றார்.

மாணவர்கள் ஆவலாகவும் சற்று அச்சத்துடனும் முனிவரை நோக்கினர்.”முனிவர், இன்னும் ஒரு விஷயம் மலைப்பயணம் மிகவும் ஆபத்தானது அதனால் ஏற்படபோகும் சுக துக்கங்கள் உங்களையே சேரும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்,என்றார்.

யாரெல்லாம் தயார் எனக்கேட்டார்,சில மாணவர்கள் தயங்கி விலக பயணத்திற்க்கு 12 பேர் தயாரானார்கள்.முனிவர் புதிருக்கான கேள்வியை சொன்னார்,

மனிதன் நூறு வருடம் இளமையாக வாழ என்னவழி? இதுதான் அந்த கேள்வி இந்த கேள்விக்கு அவரிடம் பதில் இருக்கிறது அதை பெற்றால் உங்களுக்கு மந்திரமும் கிடைக்கும் நூறு வருடம் இளமையாக வாழ வழியும் கிடைக்கும் என்று மாணவர்கள் பயணத்தை தொடங்கி வைத்தார்.

பனிரெண்டு பேரும் புறப்பட்டனர்,முதல் நாள் இரவு அனைவரும் ஒரு பாறை அடியில் உறங்கி விடிகாலை பயணத்தை ஆரம்பித்தனர்.அதில் மூவர் நாங்கள் தனியாக பிரிந்து மலைஉச்சி செல்கிறோம் என பிரிந்தனர் ஆனால் அவர்கள்சென்ற பாதை தவறுதலாக போயிற்று காடிற்குள்ளாகவே அலைந்து திரிந்தனர்

மேலும் ஒன்பது பேரில் மூவர் எங்களால் மலையேற முடியவில்லை என்று கீழே இறங்கி விட்டனர் மீதி ஆறுபேர் பயணத்தை தொடர்ந்தனர்  ஒருநாள் சென்றவுடன் சோர்வில் ஆங்காங்கு நான்கு பேர் மயங்கி சோர்ந்து தங்கி விட்டனர்.

இப்போது இருவர் மட்டுமே சென்றனர் அந்த இருவரில் ஒருவன் சுயபுத்தி இல்லாதவன் இன்னொருவன் சபலபுத்தியடையவன்,சிறிதுதூரம் சென்றதும் சபலபுத்தியடையவன் சுயபுத்தி இல்லாதவனை பார்த்து “அடேய் அங்கு தெரியுதுபார் பாதை அதுதான் மலைஉச்சிக்கு பாதைபோல் தெரிகிறது அதில்செல்வோம் என கூறி மாற்றுப்பாதையில் அவனை திசைமாற்றி விட்டுவிட்டான்.

இவன் மட்டும் மலை உச்சியை அடைந்தான் குகைக்கு நேர்சென்றான்.யார் வருவார்கள் என குகையை பார்த்தான் அப்பொழுது  குகைக்குளிருந்து மிகமிக அழகான் தேவதை வந்தாள் என்ன வேண்டும்கேள் என்று இவனைப்பார்த்து கேட்டாள்,

அந்த தேவதையை பார்த்தவுடன் இவனுக்கு மூச்சே நின்று விடும்போல் இருந்தது ஏனெனில் இதற்க்கு முன் இப்படியொரு அழகிய பெண்ணை பார்த்ததேயில்லை இவன் தான் எதற்கு வந்தோம் என்பதே மறந்துபோயிற்று.அவளை பார்த்து என்ன கேட்டான் தெரியுமா..

உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா”…..

தேவதை,இல்லை எனக் கூறிவிட்டு மறைந்தது.

அப்போதுதான் அவன் தான் என்னசெய்தோம் என்று உணர்ந்து பாறையில் முட்டிக்கொண்டு அழுதான்…….

Tuesday, February 15, 2011

கல்யாணம் பண்ணிப்பார்…பத்திரிக்கை குடுத்துப்பார்…

எனக்கு ஏற்பட்ட அனுபவம்  நம்மில் பலருக்கும் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.சில மாதங்களுக்கு முன்பு என் நண்பர்கள் இருவருக்கு அடுத்தடுத்த மாதங்களில் திருமணம் நடைபெற்றது அதற்கு அழைப்பிற்க்கு சென்றபோது பெற்ற அனுபவத்தை இங்கு பகிர்கிறேன்.07548C32-00C1-4108-A6A7-62745B166762

திருமணத்தில் முக்கிய அம்சமே யாரையும் விட்டுப்போகாமல் அழைக்க வேண்டும் என்பதே.எனவே நண்பர்கள் அனைவர் பெயரையும் ஒரு லிஸ்ட் எடுத்துக்கொண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை காரை கிளப்பினோம்.

முதலில் அருகில் உள்ள வீடுகளில் இருந்து ஆரம்பிப்போம் என்று முடிவு செய்து ஒரு நண்பன் வீட்டிற்குச் சென்றோம்.எங்களை வரவேற்ற நண்பன் மற்றும் அவனது மனைவியும் குடிக்க தண்ணீர் கொடுத்தார்கள் அப்போது காலை 7.00 மணி இருக்கும் பிறகு நண்பன் மனைவி நல்ல பெரிய கிளாசில் டீ கொண்டுவந்து கொடுத்தார் நாங்களும் ,வீட்டிலேயும் காபி குடிக்கவில்லை எனவே ஆனந்தமாக குடித்துவிட்டு  {இன்று முழுவதும் டீ,காபி குடித்தே ஒரு வழி ஆகப்போகிறோம் என்று தெரியாமல்}  பத்திரிக்கையை கொடுத்து கண்டிப்பாக வரவேண்டும் என சொல்லிவிட்டு வெளியே வந்து அடுத்த வீட்டிற்க்கு கிளம்பினோம்.

அங்கிருந்து 15 நிமிட தூரத்தில் இன்னொரு நண்பன் வீடு அங்கும் அவ்வாரே அவன் மனைவி பெரிய கிளாசை கையில் ஏந்தி வந்தார் நாங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டோம் மீண்டும் டீயா என என்ன செய்வது வேண்டாம் என சொன்னால் அவர்கள் உபசரிப்பை ஒதுக்கியதாக ஆகிவிடும்.சரி என்று ஆளுக்கொறு டம்ளரை எடுத்தோம் நல்லவேளை அதில் இருந்தது ஹார்லிக்ஸ் யப்பா தப்பித்தோம்.

வயிரெல்லாம் ஹாட் பிளாஸ்க் போல் இருந்தது.அங்கிருந்து 10நிமிட தூரத்தில்  ஒரு நண்பன் வீடு.அங்கு சென்றவுடன் நண்பனிடம் டீ,காபி எதுவும் வேண்டாம் இப்போதுதான் நான்கு வீட்டில் சாப்பிட்டு வருகிறோம் என முதலிலேயே கூறி விடவேண்டும் என்று நாங்களாக பிளான்பன்னி சென்றோம்.விதி வலியது.அங்கே அப்படியே சொன்னோம்.அதற்கு அவன் எல்லாபக்கமும் சாப்பிடுவீர்கள் எங்கள் வீட்டில் சாப்பிட மாட்டீர்களா என்று நாங்கள் கெஞ்சியும் விடாமல் காபி கொடுத்தார்கள்.எங்கள் ஒவ்வருவரின் மூஞ்சியை பார்க்கவேண்டுமே…

மணி சுமார் 9.00 ஆகியிருந்தது,இவ்வாறே அன்று முழுவதும் போதும் போதும் எனும் அளவுக்கு நம் மக்கள் காபி,டீ {சில இடங்களில் சாப்பாடே} சாப்பிட வைத்தே பின்னிவிட்டார்கள்.

மாலை 5.30 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தோம் அப்போது நான் என்ன மக்கா டயர்டா இருக்கும் வண்டியை எங்காவது நிறுத்தி டீ,காபி சாப்பிடலாமா என்று,திரும்பினேன் பாருங்கள் மறுபடியும் டீ,காபியா ”டேய்  என்று நண்பர்கள் என்னை கொல்ல பாய்ந்தார்கள்….

எனவே நண்பர்களே பத்திரிக்கை வைக்க போகும்போது இரண்டு வயிறுடன் செல்லுங்கள்.                 

Friday, February 11, 2011

கார்’காலம்….

ஒரு காலத்தில் கார் வைத்திருப்பதும் வாங்குவதும் மிகஆடம்பரமான கெளரவமான விஷயமாக பார்க்கப்பட்டது.நம்நாட்டில் மாருதி கார் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது ஆர்டர் செய்து சுமார் 4 மாதம் காத்திருக்க வேண்டுமாம்.

தற்போது நவீன யுகத்தில் கார் என்பது ஒரு பொது பயண அத்தியாவசியம் வீட்டிற்க்கு வேண்டிய ஒரு பொருளாக மாறி வருவதாகவே நான் கருதுகிறேன்.

நம்நாட்டில் ஓர்றிரண்டு வகை கார்களே ஓடிக்கொண்டிருந்த நிலையில் இன்று சுமார் 35 வகை கார்கம்பனிகளும் வகைக்கு சுமார் 10 வகை மாடல்களையும் நமக்கு விற்பதற்க்கு வைத்துள்ளனர்.அதில் சில கார்கள் ஏறக்குறைய 75 வருட வரை பாரம்பரியம் உள்ளவை அவ்வகைகளில் அவற்றின் பழைய தோற்றமும் தற்போதைய நவீன வகைகளையும் நான் வரிசைப்படுத்தி உள்ளேன்….

மாருதி

1269190933_81964354_2-Pictures-of--selling-my-maruti-800-1985-modelNew-Maruti-800-India-734209

செவர்லெட்

1961_chevrolet_impala2007_chevy_camaro_concept-front_left_corner

பிஎம்டபுள்யு

bmw_335_limousine_19392010-bmw-5-series

அம்பாசிடர்

ammbDSC05064

பெராரி

ferrari-cali-old-2ferrari-car-2010

மெர்சிடஸ் பென்ஸ்

old benz2011_mercedes-benz_cl-class_f34_fe_629107_717

லிமோசின்

limousine-from-1911-old-carCadillac new presidential limousine_233

ஃபியட்

old fiatfiat-linea

டிஸ்கி..

பிடித்திருந்தால் உங்கள் ஓட்டு சொத்தில் எனக்கும் கொஞ்சம் பங்கு தாருங்கள்……

Wednesday, February 9, 2011

மதுரை பேமஸ்……

பொதுவாக எனக்கு புத்தகம் படிப்பது எவ்வளவு பிடிக்குமோ அதேஅளவு சாப்பாடும் மிக பிடிக்கும்,பிடிக்கும் என்றால் விதவிதமான ஊர் சாப்பாடுகள் பிடிக்கும்.எந்த ஊரில் என்ன சாப்பாடு எந்த  கடையில் சிறப்பாக கிடைக்கும் என்பதை அறிந்து அங்கு சென்று அதை ஒரு முறையேனும் ருசித்துவிட வேண்டுமென்று எண்ணுவேன்.

அந்த வகையில் என்னிடம் பெரிய பட்டியலே உண்டு உ.ம்.தேனி நாகர் கடை முட்டை லாபா,விருதுநகர் பர்மா புரோட்டா,திருநெல்வேலி வைரமாளிகை நாட்டுக்கோழி சாப்ஸ் என்று அது ஒரு பெரிய லிஸ்ட் அந்த வரிசையில் மதுரையில் உள்ள சில் சிறப்பான உணவுகளை ஒருகை பார்த்துவிட வேண்டுமென்று நினைத்தேன்.

கவனியுங்கள் நான் இருப்பது திருப்பூரில் இங்கிருந்து மதுரைக்கு சுமார் 165 கி.மீ தூரம்.அதுவும் பைக்கில் சென்றேன்.

முதலில் திருமலை நாயக்கர் மஹால் சென்று பார்த்துவிட்டு அங்கிருந்து நேராக மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் இருந்து 25மீட்டர் உள்ள ஒரு ஹோட்ட்லில் மதுரை பேமஸ்{உலக பேமஸ்} ஜிகர்தண்டா வாங்கினேன் அடடா அந்த கலரும் வெண்ணிலா ஐஸ்கிரீமின் சுவையும்  சொல்ல வார்த்தைகளே இல்லை.ஒவ்வொரு வாயும் ருசித்து சாப்பிட்டேன் கிளாசை வைக்க மனமே இல்லை.10052010197

பிறகு அங்கிருந்து ஒரு தெரு சுற்றி வந்தால் மீனாட்சி பலகாரகடை அங்கு பாதாம் பால் சுடசுட.நான் நிறைய இடத்தில் பார்த்தவரை இப்படி ஒரு பாதாம் பால்  சாப்பிட்டதே இல்லை பாலாடை மிதக்க மிதக்க அருமையாக இருந்தது.10052010192

பிறகு அதன் அருகிலேயே ஒரு பையன் நெய்பணியாரம் ஊற்றுகிறான் நெய் என்றால் அவன் ஊற்றும் நெய் அளவை பார்த்தாலே கொலஸ்ட்ரால் இருப்பவர்ளுக்கு அது டபுளாகிவிடும்.ஆனால் அதன் சுவை அதையெல்லாம் பார்க்காது நெய்பணியாரம் அவ்வளவு அருமை.10052010193

நாக்கு தித்திப்பு சிறிது இடைவேளை கேட்டது சரி என்று அங்கிருந்து காந்தி மியுசியம் சென்று பார்த்துவிட்டு சிம்மக்கல் கோனார் கடையை நோக்கி என் வண்டி திரும்பியது.அங்கு என்க்கு ஏமாற்றம் காத்திருந்தது ஆம் கடை மாலைமுதல் தானாம்.

சரி என்று சாரதா மெஸ் தேடிப்பிடித்து அயிரைமீன் குழம்புடன் புல்மீல்ஸ் கட்டினேன்.10052010191

இதில் கவனிக்கபட வேண்டிய விசயம் என்னவென்றால் நம்பினால் நம்புங்கள் நான் இங்கிருந்து மதுரை சென்றது சாப்பிட மட்டும் தான் எனவே வாசல் வரை சென்றும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் கூட செல்லவில்லை என்றால் பார்த்துகொள்ளுங்கள்.10052010194

சாமி கும்பிடமாட்டேன் என்றாலும் மீனாட்சி அம்மன் கோயில் எனக்கு பிடிக்கும்.

வரும் காலங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு உணவுகளையும் தேடிப்போக எண்ணியுள்ளேன்.எனவே உங்களுக்கு தெரிந்த ஊர்களின் உணவுகளையும் சிறப்புகளையும் எனக்கு சிபாரிசு செய்யலாமே….