Wednesday, December 29, 2010

எடை குறைப்பும் ஒரு ரூபாயும்-பாகம்2

முதலில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை பார்ப்போம்.நம் அன்றாட உணவில் தவிற்க்க முடியாத வகை அரிசி
ஆனால் எடை குறைய  நாம் தவிற்க்க வேண்டிய முதல் உணவே அரிசி தான்.
ஒரு நாளைக்கு சுமார் 1000 கலோரிகளை நாம் நம் உடற்பயிற்ச்சியின் மூலம் செலவிட வேண்டும்.
தோராயமக[1000 kcal=200gm] ஆகும்.
இப்போது தினசரி மாலை அல்லது காலை 1.5மணி நேரம் உடற்பயிற்ச்சி செய்ய வேண்டும்.அருகில் உள்ள ஜிம்மிற்க்கோ
அல்லது,மைதானத்திற்கோ சென்று செய்யலாம்.ஜிம்மில் உடற்பயிற்ச்சியாளர் பயிற்ச்சி அளிப்பார்கள் என்றாலும் நான்
ஜிம்மில் மேற்கொண்ட பயிற்ச்சிகளையும் உங்களுக்கு சொல்கிறேன்.

சராசரியாக நடைபயிற்சி 25 நிமிடம்,சைக்கிள் 20நிமிடம்,மற்றும் வயிறு,என பிரித்து கொள்ள வேண்டும்.
இப்போது தினசரி மேற்கொள்ளவேண்டிய உணவு முறைகளை பார்ப்போம்.
காலை- சப்பாத்தி- 3
11.00.மணிக்கு-ஏதேனும் ஒரு பழ ஜூஸ்
1.30.மணிக்கு-முட்டை வெள்ளைக்கரு 4,சப்பாத்தி- 2
5.00.மணிக்கு-கருப்பு டீ,சுண்டல்.
இரவு.8.00.மணிக்கு-சப்பாத்தி- 3,முட்டை வெள்ளைக்கரு 2.
இது ஒரு நாளைய சாப்பாட்டு முறையாகும் மேலும் கோதுமை ரொட்டி,காய்கள்,பருப்பு வகைகள்,போன்றவற்றை
நம் விருப்பத்திற்கேற்றவாரு அளவாக எடுத்து கொள்ள வேண்டும்.
உணவு பழக்கமும் சரியாக பின்பற்ற வேண்டும்.உடற்பயிற்ச்சியும் தவறாமல் செய்ய வேண்டும்.
மேலும் நம் எடையயை கண்காணித்து வரவேண்டும்.

  

Monday, December 27, 2010

எடை குறைப்பும் ஒரு ரூபாயும்-பாகம் 1

நம்மில் பருமனாக இருக்கும் எவருக்கும் எடை குறைத்து ஸ்லிம் ஆக வேண்டும் என்பதில் நிறைய சபதம் கூட செய்திருப்போம் ஆனால் அதை  செயல்படுத்துவதற்கு தான் நாளை தள்ளி போட்டுக்கொண்டே இருப்போம்.
புத்தாண்டிலிருந்து,தீபாவளி முடிந்து,அடுத்த வாரத்திலிந்து என்று
இருப்பினும் நல்லா சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது திடீரென நாக்குக்கு பிடிச்ச சாப்பாட்டை நிறுத்துவது கஷ்டம் தான்.ஆனால் எடை குறைந்து
அதனால் ஏற்படும் மாற்றம் பலன் நமக்கு தெறிய வரும்போது நாம் அடையும்
மகிழ்ச்சி அனுபவித்தால் தான் புரியும்.
                                                                ஒரு ரூபாய்

சரி இப்போது எடை குறைக்க ஒரு ரூபாய் போதுமா என்று கேட்டால் ஒரு ரூபாயில் ஆரம்பிக்கலாம் என்று சொல்கிறேன்.எப்படி முதலில் நாம் நம் எடைஎவ்வளவு நம் உயரத்திற்கேற்ற எடை இருக்கிறோமா என தெறிந்துகொள்ள வேண்டும்.
அதாவது உ.ம் நம் உயரம் 174cm எனில் அதில் 100ஐ கழித்தால் 74 இது தான் நம் உயரத்திற்கு சரியான எடை.முதலில் எடை குறைக்க ஒரு இலக்கு வைத்து கொள்ள வேண்டும்.
ஒரு வாரத்திற்கு 1.5கிலோ என நம்மால் எவ்வளவு முடியுமோ அதை பொறுத்து,ஆனால் வாரத்திற்கு 1.5 கிலோ என்பது தான் ஒரு ஆரோக்கியமான சரியான முறை என கருதுகிறேன்.
முதலில் எடை குறைக்க ஆரம்பிக்கும் முதல் நாள் ஒரு ரூபாய் நாணயம் போட்டு எடை பார்க்கும் டிஜிட்டல் மிஷினில் நம் எடையை பார்த்து
 கொள்ள வேண்டும்.மேலும் எடை குறைக்கும் காலத்தில் வாரம் ஒரு நாளில்   எடையை கண்காணித்து கொண்டே வரவேண்டும்.
நம் ஊரில் சில்லரை தட்டுப்பாடு அதிகம் என்வே ஒரு ரூபாய் காயின் கிடைக்கும் போதெல்லாம் சேர்த்து வைத்துகொள்ளுங்கள்.
ஒரு முக்கியமான செய்தி இந்த பதிவை நான் படிப்பறிவிலோ,பட்டறிவிலோ எழுதவில்லை என் சொந்த அனுபத்தில் எழுதுகிறேன்.ஆம் நான் 2008ல் சுமார் 100கிலோ எடை இருந்தேன்.இப்போது 82 கிலோ இருக்கிறேன்.
                         எனவே வாருங்கள் ஸ்லிம்மான உடற்கட்டை பெறுவோம்.