Monday, January 31, 2011

8 வது புத்தக கண்காட்சி திருப்பூரில்…..ஜன 28முதல்…பிப் 6வரை..

ஒரு வாசகனை ஒரே சமயத்தில் வானத்திலும் பூமியிலும்,கனவிலும் நினைவிலும்,எதிர்காலத்திலும் நிகல்காலத்திலும் பயணிக்க வைக்க கூடிய வல்லமை ஒரு நல்ல புத்தகத்திற்கும் ஒரு நல்ல எழுத்தாளருக்கும் உண்டு.02

வாசிப்பனுபவம் என்பது அவ்வளவு இனிமையானதாகும். எனக்கு தெரிந்து சிலர் படிக்கும் போது தன்னையே மறந்து படிப்பதை நான் பார்த்திருக்கிறேன் (உ.ம். என் அப்பா அப்படித்தான் படிப்பார் ) எனக்கு புத்தகங்களை அறிமுக படுத்தியதே என் அப்பா தான்.நான் என் மகனுக்கு புத்தகங்களை அறிமுகபடுத்த தொடங்கி உள்ளேன்.புத்தகம் வாசிப்பதை குழந்தையிலிருந்தே நாம் பழக்க படுத்தி விட வேண்டும்.பள்ளி புத்தகங்கள் இருப்பினும் அதற்கு இணையானதே மற்ற புத்தகங்களும் என்ற எண்ணைத்தை சிறுவர்க்கு ஊட்ட வேண்டும்.

அந்த வகையில் புத்தக கண்காட்சி கடந்த ஏழு ஆண்டுகளாக வெற்றிகரமாக திருப்பூரில் நடைபெற்று  வருகிறது இது எட்டாவது ஆண்டு,இந்த ஆண்டு  மிக சிறந்த முறையில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது நிறைய பதிப்பாளர்கள் ஸ்டால்கள் அமைத்துள்ளனர்.மற்ற ஊர்களில் நடைபெறும் சில பிரபலமான புத்தக கண்காட்சியை போலவே திருப்பூரில் நடைபெறும் புத்தக கண்காட்சியும் தற்போது பரவலாக அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

இந்த முறை நான் இரண்டு நாட்களுக்கு முன்பு நான் சென்றேன் சில புத்தகங்கள் வாங்கியுள்ளேன்

  • சூடிய பூ சூடற்க- நாஞ்சில் நாடன்
  • தேகம்-சாரு நிவேதிதா
  • ஸீரோ டிகிரி-சாரு நிவேதிதா
  • கோபல்ல கிராமம்-கி.ரா
  • நான் ஏன் நாத்திகன் – பகத்சிங்
  • மாயா-சுஜாதா
  • சொல்லவே முடியாத கதைகளின் கதை-ஆதவன் தீட்ஷன்யா
  • எழுத்தும் வாழ்க்கையும்-சுஜாதா
  • கடவுளும் சாத்தானும்-சாரு நிவேதிதா …

நீங்களும் இதுவரை இல்லையென்றாலும் இனிமேல் புத்தகங்களை கொண்டாடுவோம்..

Thursday, January 27, 2011

படித்ததில் பிடித்தது…..

ஒரு முறை அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆபீஸ் பையன் வேலைக்கு  விண்ணப்பித்திருந்தான்.சில நாள் கழித்து இண்டர்வியு லெட்டர் வந்த்தது குறிப்பிட்ட நாளில் அலுவலகத்திற்க்கு சென்றான்.அங்கு நான்கு அதிகாரிகள் அவனை நேர்முக தேர்வு செய்தனர் அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்தான்.அவர்கள் ”நீ நன்றாக  பதிலளித்தாய் உன்னை தேர்வு செய்யலாம் என நினைக்கிறோம்.நீ எப்போது வேலையில் சேரவேண்டும் என்பதை இ-மெயில் அனுப்புகிறோம்   உன் இ-மெயில் ஐடி கொடு” என்றார்கள்,

அந்த இளைஞன்,எனக்கு இ-மெயில் ஐடி யும் இல்லை கம்பியுட்டரும் இல்லை என கூறினான்.அவர்களுக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது,”இவர் மைக்ரோசாப்ட் வேலை செய்யப்போகிறேன் என்கிறார் இ-மெயில் இல்லையாம்”என்று உனக்கு வேலை இல்லை  என  திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.

அந்த சமயத்தில் அவன் கையில் 100 டாலர் தான் இருந்தது அதைவைத்து தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும்.அங்கேயே சாலை ஓரத்தில் ஒரு சின்ன கடையைத் தொடங்கினான், அவன்.கிடுகிடுவென்று வளர்ந்து அந்தக்கடை ஒரு பெறிய பிஸினஸ் சென்டராகிவிட்டது.

குறுகிய காலத்தில் அவன் திறமையால் நூற்றுக்கணக்கான கடைகளை திறந்து பெறும் பணக்காரனாகிவிட்டான்.அவரை ஒரு பிஸினஸ் பத்திரிக்கையில் இண்டர்வியூ செய்தார்கள்.

பேட்டி முடிந்தவுடன்,”இந்த கட்டுரையை உங்களுக்கு இ-மெயிலில் அனுப்புகிறோம் உங்கள் இ-மெயில் கொடுங்கள்” என  பத்திரிக்கையாளர்கள் கேட்டார்கள்.”எனக்கு இ-மெயில் ஐடி இல்லையே” என்று அவர் சொன்னார்.அப்பொழுது அந்த  பத்திரிக்கையாளர் “இ-மெயிலும் கம்பியூட்டர் இல்லாமலேயே இவ்வளவு வளர்ந்திருக்கீங்க,இ-மெயில் இருந்தால் நீங்கள் எங்கே இருப்பீங்கன்னு தெரியுமா” என்று கேட்டார்.அப்பொழுது நம் ஆள் சொன்னார்,”எனக்கு நல்லா தெரியும்.மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆபீஸ் பையனாக இருந்திருப்பேன்”.

Wednesday, January 26, 2011

இந்தியர் என்பதில் பெருமைகொள்வோம்,அர்ஜூன் டேங்க்...



குடியரசு தின விழாவில் கலைஞர் டி.வியில் நடிகர் கார்த்தி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று பார்த்தேன்.
நம் இந்திய இராணுவத்தின் பெருமைமிகு உருவாக்கமான அர்ஜூன் டேங்கை கார்த்தி ஓட்டி பார்த்து அதன் சிறப்புகளை இராணுவ உயர் அதிகாரிகளிடம் பேட்டி கண்ட நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. 
 நம் இந்திய இராணுவத்திடம் எத்தனையோ டேங்க்குகள் இருந்தாலும் அர்ஜூன் டேங்க் வரலாற்று சிறப்பு வாய்ந்தது.பொதுவாக இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை இந்தியா வெளிநாடுகளிலும் வாங்குகிறது,உள்நாட்டிலும் தயாரிக்கிறது
 அப்படி உள்நாட்டில் இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை தயாரித்துகொடுப்பதற்கு DRDO என்ற அமைப்பு உள்ளது இவர்கள்தான் படைகளுக்கு தேவையான ஆயுதங்கள்,
தளவாடங்கள்,மற்றும் தொழில் நுட்ப உபகரனங்களில் சில ஆகியவற்றை செய்துகொடுக்கிறார்கள்.
                ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய இராணுவம் பீர்ங்கிகளை ரஷ்யா போன்ற வெளிநாடுகளில் தான் வாங்கி பயன்படுத்தி வந்த்தது.இந்த கால கட்டத்தில் நம் இந்திய வல்லுநர்களின் தீவிர முயற்ச்சியால் முழுக்க முழுக்க நம் இந்திய தொழில் நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த அர்ஜூன் டேங்க் ஆகும். 
                                        அர்ஜூன் டேங்க்கின் சிறப்பகள்....
  • இது மணிக்கு 70 km வேகத்தில் செல்லும்,
  • எந்த ஒரு பாதையிலும் லாவகமாக செலுத்த முடியும்,
  • இயக்குவது ஒரு காரை போன்று எளிதானது,
  • இதில் 12.7 mm மிஷின் கன் உள்ளது,
  • சுமார் 1400 குதிரை திறன் கொண்டது,
  • 450 கி மீ இலக்கை சுடும் திறன் கொண்டது,
  • அனைத்து உலக நாடுகளின் சோதனையிலும் சிறப்பானது என பெயர்பெற்றது,
  • 2004 ஆம் ஆண்டு நாட்டுக்கு அற்பணிக்கபட்டது,
  • எந்த ஒரு தட்பவெட்பத்திலும் செயல்படக்கூடியது.

உலக நாடுகளின் மத்தியில் நம் பெருமையயை நிலைநாட்டிய.நம் விஞ்ஞானிகளுக்கு நன்றி சொல்வோம்.
                                 இந்தியர் என்பதில் பெருமைகொள்வோம்.
  •          

Wednesday, January 5, 2011

உலகின் Top 10 காஸ்ட்லி...

1.உலகின் மதிப்பு வாய்ந்த வைரம் குல்லினன்
இதன் மதிப்பு சுமார் 400 மில்லியன் டாலர் ஆகும்.

2.பீட்டர் அலயான்ஸ் வடிவமைத்த NOKIA 8800 போன்
விலை என்ன தெரியுமா 1,34,000 டாலர்.விஷயம் என்னவென்றால்
இதில் 21.5 கேரட்டில் 680 பிங்க் மற்றும் வெள்ளை நிற வைரகற்கள்
மற்றும் 18 கேரட் வெள்ளை தங்கம் கொண்டு செய்யபட்டது.

3.மைக்ரோ நிறுவனர் பில்கேட்ஸ் வீட்டின் இன்றைய மதிப்பு
சுமார் 220 மில்லியன் டாலர்.[இது வீடல்ல அரண்மனை.]

4.அபு தாபியில் உள்ள ஒரு 7 நட்ச்சத்திர ஹோட்டலில் 7நாட்கள்
தங்க எவ்வளவு தெரியுமா அதிகமில்லை ஜென்டில்மேன்.
நம்மூர் பணத்தில் சுமார் 4.2 கோடி...இதில் பல ஆடம்பர வசதிகள்
நமக்கு தருகிறார்கள்....

5.இன்றைய தேதியில் உலகின் காஸ்ட்லியான செலவில்
எடுக்கப்பட்ட திரைப்படம். நம்மையெல்லாம் வேறு உலகில் பயணிக்க
வைத்த ஜேம்ஸ் கேம்ரூனின் அவதார் படம்தான்.இதன் பட்ஜெட் ரூ.421 கோடி.

6.இந்திய வம்சாவளியை சேர்ந்த மிகப் பெரும் தொழில் அதிபர் லட்சுமி மிட்டல்
தன் மகள் வனிஷா மிட்டல் திருமணத்தை 78 மில்லியன் டாலர் செலவில் நடத்தினார்
இதுதான் உலகின் காஸ்ட்லியான செலவில் செய்யப்பட்ட திருமணமாக கணக்கிடப்படுகிறது.

7.ரஷ்ய நாட்டு தொழில் அதிபரும்,இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் முக்கிய அணியான செல்சியின்
தலைவருமான அப்ரோவிச்ன் உல்லாச கப்பலின் விலை சுமார் 120 கோடி டாலர்.

8.கத்தார் நாட்டில் பேன்சி நம்பருக்கான ஏலம் விடப்பட்டது.666 6666 என்ற போன் நம்பர்
2.1 மில்லியன் டாலருக்கு விலை போனது.

9.திபெத்திய மேஸ்டிப் வகை நாய்கள் விலை 80,000 முதல் ஒரு கோடி வரை விற்க்கப்படுகிறது.
ஏனென்றால் இது 6000 வருடத்துக்கு முந்தைய நாய் இனத்தை சேர்ந்த்தாகும்.

10.இங்கிலாந்தை சேர்ந்த லீ ஸ்டாபோர்டு ஒருமுறை முடி வெட்டிவிட  சுமார் 1.50000 ரூபாய்
வாங்குகிறார்.இவர்தான் உலகின் காஸ்ட்லியான சிகை அலங்கார நிபுணர்.
                                       நாணயம் விகடனில் படித்தது....


என்ன நம் ஊர் வெங்காயம் இந்த லிஸ்டில் சேராமல் இருந்தால் சரி!!!!!!!!!!.......