Thursday, February 17, 2011

ஒரு ’குட்டி’க்கதை……..உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா

அந்த நாட்டின் எல்லையில் இருந்த ஒரு காட்டில் ஒரு ஆசிரமம் இருந்தது அதை முனிவர் ஒருவர் நிர்வகித்து வந்தார்.அங்கு பல தேசங்களிலிருந்தும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கல்வி உள்ளிட்ட கலைகளை கற்பதற்காக சேர்த்து விடிருந்தனர்.

முனிவரும் தனக்கு தெரிந்த கலைகளையும் திறம்பட சொல்லிக்கொடுத்தார்.மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு கலையில் சிறந்து விளங்கினர்.Blackwhite writing personal story

பாடங்களும்,பயிற்ச்சிகளும் நிறைவு பெறும் தருணம் வந்தது, முனிவர் மாணர்கள் அனைவரையும் அழைத்தார்,

         ’மாணவர்களே உங்களுக்கு இந்தவார இறுதியுடன் பாடங்கள்,பயிற்ச்சிகள் நிறைவடைய இருக்கிறது,இறுதியாக உங்களுக்கு ஒரு அதிர்ஷ்ட மந்திரம் ஒன்றை சொல்லிக்கொடுக்கிறேன் அது ஒரு புதிர் அதற்கு விடை கண்டுபிடித்தால் அந்த மந்திரம் வேலைசெய்யும்.அந்த மந்திரம் உங்களிடம் இருந்தால் உங்களை யாராலும் வெல்லமுடியாது,ஆனால் அந்த புதிருக்கு விடை என்னிடம் இல்லை.

அது நம் ஆசிரமத்திற்க்கு பின்புறம் உள்ள மலையின் உச்சியில் ஒரு குகை உள்ளது அந்த குகைக்குள் ஒருவர் இருக்கிறார் அவரிடம் இருக்கிறது,இதில் முக்கியமான் விஷயம் என்னவென்றால் அவர் குகையிலிருந்து வெளியில் வரும்போது,அவரிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்க்க முடியும்,அதற்க்கு பதில் சொல்லியவுடன் மறைந்து விடுவார்,அதை நீங்கள் நன்கு ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்’

அந்த விடையை யார் முதலில் என்னிடம் வந்து சொல்கிறீர்களோ அந்த மாணவனுக்கு அந்த மந்திரத்தின் சூத்திரம் சொல்லித்தருவேன்”என்றார்.

மாணவர்கள் ஆவலாகவும் சற்று அச்சத்துடனும் முனிவரை நோக்கினர்.”முனிவர், இன்னும் ஒரு விஷயம் மலைப்பயணம் மிகவும் ஆபத்தானது அதனால் ஏற்படபோகும் சுக துக்கங்கள் உங்களையே சேரும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்,என்றார்.

யாரெல்லாம் தயார் எனக்கேட்டார்,சில மாணவர்கள் தயங்கி விலக பயணத்திற்க்கு 12 பேர் தயாரானார்கள்.முனிவர் புதிருக்கான கேள்வியை சொன்னார்,

மனிதன் நூறு வருடம் இளமையாக வாழ என்னவழி? இதுதான் அந்த கேள்வி இந்த கேள்விக்கு அவரிடம் பதில் இருக்கிறது அதை பெற்றால் உங்களுக்கு மந்திரமும் கிடைக்கும் நூறு வருடம் இளமையாக வாழ வழியும் கிடைக்கும் என்று மாணவர்கள் பயணத்தை தொடங்கி வைத்தார்.

பனிரெண்டு பேரும் புறப்பட்டனர்,முதல் நாள் இரவு அனைவரும் ஒரு பாறை அடியில் உறங்கி விடிகாலை பயணத்தை ஆரம்பித்தனர்.அதில் மூவர் நாங்கள் தனியாக பிரிந்து மலைஉச்சி செல்கிறோம் என பிரிந்தனர் ஆனால் அவர்கள்சென்ற பாதை தவறுதலாக போயிற்று காடிற்குள்ளாகவே அலைந்து திரிந்தனர்

மேலும் ஒன்பது பேரில் மூவர் எங்களால் மலையேற முடியவில்லை என்று கீழே இறங்கி விட்டனர் மீதி ஆறுபேர் பயணத்தை தொடர்ந்தனர்  ஒருநாள் சென்றவுடன் சோர்வில் ஆங்காங்கு நான்கு பேர் மயங்கி சோர்ந்து தங்கி விட்டனர்.

இப்போது இருவர் மட்டுமே சென்றனர் அந்த இருவரில் ஒருவன் சுயபுத்தி இல்லாதவன் இன்னொருவன் சபலபுத்தியடையவன்,சிறிதுதூரம் சென்றதும் சபலபுத்தியடையவன் சுயபுத்தி இல்லாதவனை பார்த்து “அடேய் அங்கு தெரியுதுபார் பாதை அதுதான் மலைஉச்சிக்கு பாதைபோல் தெரிகிறது அதில்செல்வோம் என கூறி மாற்றுப்பாதையில் அவனை திசைமாற்றி விட்டுவிட்டான்.

இவன் மட்டும் மலை உச்சியை அடைந்தான் குகைக்கு நேர்சென்றான்.யார் வருவார்கள் என குகையை பார்த்தான் அப்பொழுது  குகைக்குளிருந்து மிகமிக அழகான் தேவதை வந்தாள் என்ன வேண்டும்கேள் என்று இவனைப்பார்த்து கேட்டாள்,

அந்த தேவதையை பார்த்தவுடன் இவனுக்கு மூச்சே நின்று விடும்போல் இருந்தது ஏனெனில் இதற்க்கு முன் இப்படியொரு அழகிய பெண்ணை பார்த்ததேயில்லை இவன் தான் எதற்கு வந்தோம் என்பதே மறந்துபோயிற்று.அவளை பார்த்து என்ன கேட்டான் தெரியுமா..

உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா”…..

தேவதை,இல்லை எனக் கூறிவிட்டு மறைந்தது.

அப்போதுதான் அவன் தான் என்னசெய்தோம் என்று உணர்ந்து பாறையில் முட்டிக்கொண்டு அழுதான்…….

2 comments:

டக்கால்டி said...

அப்போ கல்யாணம்கிற பேச்சையே எடுக்க கூடாதுங்கிறீங்க...ரைட்டு பாஸ்...

Lee said...

கதை சூப்பர்.. வாய்ப்புகள் கிடைத்தாலும் உபயோகப்படுத்தத் தெரியாதவர்கள் நிறைய பேர் இருக்காங்க...