Monday, December 27, 2010

எடை குறைப்பும் ஒரு ரூபாயும்-பாகம் 1

நம்மில் பருமனாக இருக்கும் எவருக்கும் எடை குறைத்து ஸ்லிம் ஆக வேண்டும் என்பதில் நிறைய சபதம் கூட செய்திருப்போம் ஆனால் அதை  செயல்படுத்துவதற்கு தான் நாளை தள்ளி போட்டுக்கொண்டே இருப்போம்.
புத்தாண்டிலிருந்து,தீபாவளி முடிந்து,அடுத்த வாரத்திலிந்து என்று
இருப்பினும் நல்லா சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது திடீரென நாக்குக்கு பிடிச்ச சாப்பாட்டை நிறுத்துவது கஷ்டம் தான்.ஆனால் எடை குறைந்து
அதனால் ஏற்படும் மாற்றம் பலன் நமக்கு தெறிய வரும்போது நாம் அடையும்
மகிழ்ச்சி அனுபவித்தால் தான் புரியும்.
                                                                ஒரு ரூபாய்

சரி இப்போது எடை குறைக்க ஒரு ரூபாய் போதுமா என்று கேட்டால் ஒரு ரூபாயில் ஆரம்பிக்கலாம் என்று சொல்கிறேன்.எப்படி முதலில் நாம் நம் எடைஎவ்வளவு நம் உயரத்திற்கேற்ற எடை இருக்கிறோமா என தெறிந்துகொள்ள வேண்டும்.
அதாவது உ.ம் நம் உயரம் 174cm எனில் அதில் 100ஐ கழித்தால் 74 இது தான் நம் உயரத்திற்கு சரியான எடை.முதலில் எடை குறைக்க ஒரு இலக்கு வைத்து கொள்ள வேண்டும்.
ஒரு வாரத்திற்கு 1.5கிலோ என நம்மால் எவ்வளவு முடியுமோ அதை பொறுத்து,ஆனால் வாரத்திற்கு 1.5 கிலோ என்பது தான் ஒரு ஆரோக்கியமான சரியான முறை என கருதுகிறேன்.
முதலில் எடை குறைக்க ஆரம்பிக்கும் முதல் நாள் ஒரு ரூபாய் நாணயம் போட்டு எடை பார்க்கும் டிஜிட்டல் மிஷினில் நம் எடையை பார்த்து
 கொள்ள வேண்டும்.மேலும் எடை குறைக்கும் காலத்தில் வாரம் ஒரு நாளில்   எடையை கண்காணித்து கொண்டே வரவேண்டும்.
நம் ஊரில் சில்லரை தட்டுப்பாடு அதிகம் என்வே ஒரு ரூபாய் காயின் கிடைக்கும் போதெல்லாம் சேர்த்து வைத்துகொள்ளுங்கள்.
ஒரு முக்கியமான செய்தி இந்த பதிவை நான் படிப்பறிவிலோ,பட்டறிவிலோ எழுதவில்லை என் சொந்த அனுபத்தில் எழுதுகிறேன்.ஆம் நான் 2008ல் சுமார் 100கிலோ எடை இருந்தேன்.இப்போது 82 கிலோ இருக்கிறேன்.
                         எனவே வாருங்கள் ஸ்லிம்மான உடற்கட்டை பெறுவோம்.


2 comments:

Philosophy Prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

Leeluma said...

Tharpoluthu intha katturaiyai neengal padithal nandraka irukkum