Monday, November 22, 2010

கொச்சி-தீபாவளி பயணம்சென்ற தீபாவளிக்கு  கொச்சி சுற்றி பார்க்கலாம் என்று திட்டமிட்டு கிளம்பினோம்.திருப்பூர் ரயில் நிலையத்தில் வண்டி ஏரும் போதே மேகமூட்டமாக இருந்தது சரி  கொச்சியில் மழை நம்மை வெளியே
விடாது என நினைத்தபடியே அமர்ந்தோம்.
வண்டி சரியாக மதியம் 1.35 க்கு எர்ணாகுளம் அடைந்த்தது.ஏற்கனவே நண்பர்கள் மூலம் சில இடங்கள் தெரியும் என்றாலும் எங்கள் எதிர் இருக்கையில் பயணம் செய்த எர்ணாகுளம் வாசியிடம் பேச்சு கொடுத்ததில் அவர் சில இடங்கள் பற்றி கூறினார்.கூறினார் என்பதை விட
உதவினார் என்பதே சரி.
ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த்ததும் சப்பிட்டு விடலாம் என்று
ஹோட்டல் ஒன்றிற்கு சென்றோம் அங்கு நம் ஊர் சாப்பாடும் இருந்தது விலையும் பரவாயில்லை. கொச்சினில் சுற்றி பார்க்க நாங்கள் முதலில் சென்றது எர்ணாகுளம் டு வைபின்.அதாவது போட்டில்
டிக்கட் வெறும் இரண்டு ரூபாய் தான்.நம் ஊர் டவுன் பஸ் போல் உள்ளது வழியில் துறைமுகத்தில்
லண்டன் பய்ண கப்பல் ஒன்று பிரமாண்டமாய் நின்றிறுந்தது.அதன் பெயர் ஓசன் வில்லேஜ் [மிதக்கும் கிராமம்]
சரியான பெயர் தான்  எட்டு மாடி கொண்டிறுந்தது.பிறகு அங்கிருந்து
                                            போர்ட் கொச்சி.
அங்கு மகாத்மா காந்தி கடற்கறை,சீன மீன் பிடி வலைகள்,புனித பிரான்சிஸ் சர்ச் பொன்றவை முக்கிய இடங்கள்.
கடற்கறை என்றால் மணற் பரப்புகள் இல்லை ஆனால் கடலை ரசிக்க பென்ச் போட்டு உள்ளார்கள்.கடல் அமைதியாக
இருக்கிறது அதை ரசித்து விட்டு அங்கிருக்கும் வட நாட்டு வியாபாரிகளிடம் சிறிய கன்ணாடி வேலைபாடுககள்
உள்ள நகை பெட்டி ஒன்றை நண்பர் வாங்கினார் விலை சற்று பரவாயில்லை.
நான் உள்ளூர் கடையில் என் மகனுக்கு ஒரு மர வேலைப்பாடு கொண்ட கப்பல் வாங்கினேன் விலை சற்று அதிகம்
பிறகு அருகில் உள்ள சர்ச்க்கு சென்றோம்.சுமார் ஜநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது நிறைய வெளிநாட்டு பயணிகளை
பார்க்க முடிந்தது.அங்கிருந்து போட் ஜெட்டி[படகு குழாம்] நோக்கி நடக்க ஆரம்பித்தோம் தாகமாக இருந்ததால் ஒரு கடையில்
நன்னாரி சர்பத் வாங்கினோம் அது நல்ல சுவையாகவே இருந்த்தது.எங்கு பார்த்தாலும் பசுமை குளிர்ச்சி.சுமார் பனிரெண்டு மணியளவில்
போட் ஜெட்டி[படகு குழாம்]  வந்தடைந்தோம்.நாங்கள் வரவும் படகும் வர அதில் ஏறி கொண்டோம்.மீண்டும் எர்ணாகுளம்
வந்தோம்.
                                          போல்கட்டி பேலஸ்
எர்ணாகுளம் டு போல்கட்டி பேலஸ் செல்ல மற்றொரு போட் ஜெட்டி[படகு குழாம்] சென்றோம்.அங்கு அரை மணிக்கு ஒரு
போட்தான் உண்டு.சிறிது நேரம் காத்திருந்தோம் அந்த சமயத்தில் அங்கிருக்கும் சுற்றுலா படகுகாரர்கள் ஒரு மணி நேர பயணத்திற்கு
ஜம்பது ரூபாய் என்று அழைத்து கொண்டிருந்தர்கள்.அதில் ஏறவில்லை.அப்போது அரசு போட் வந்தது .அதில் ஏறினோம்
அங்கிருந்து போல்கட்டி பத்து நிமிடம் தான் .அங்கு பெறிய சுற்றுலா இடம் ஒன்றும் இல்லை.சுமார் முன்நூறு ஆண்டுகளுக்கு
முன்பு அரண்மனை இருந்திருக்கிறது அதை தனியார் நிறுவனம் வாங்கி இப்போது மூன்று நட்சத்திர ஹோட்டல் நடத்துகின்றனர்.
எனவே அங்கு அதை சுற்றி பார்க்க அனுமதி இல்லை.ஆனால் தங்கலாம் ஒரு நாளைக்கு நூறு டாலர்கள் வரிகள் தனி[ரூ.5000 வரும்]
அது உங்கள் பேங்க் பேலன்ஸை பொறுத்தது.மற்றபடி சுற்றி உள்ள புல் வெளிகளில் நடந்து கடலை பார்த்து ரசிக்கலாம் போட்டோ எடுக்கலாம்.
அவ்வளவே..இதை தவிர்த்து இன்னும் நிறைய இடங்கள் சுற்றி பார்க்க உள்ளன.
                                             ப்ரிபெய்டு ஆட்டோக்கள்
இந்த இடத்தில் கொச்சியில் ஆட்டோக்கள் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.அங்கெல்லாம் நம் ஊர் போல குத்துமதிப்பாக
விலை சொல்வதில்லை.ரயில்நிலைய வாசலிலேயே ப்ரிபெய்டு ஆட்டோ பூத் உள்ளது அங்கு நாம் செல்ல வேண்டிய இடத்தை சொல்லி இரண்டு
ரூபாய் கொடுத்தால் தொகை எவ்வளவு என்று பில் அடித்து கொடுத்து விடுகிறார்கள் அதை நாம் இறங்கும் இடத்தில் ஆட்டோகாரரிடம் கொடுத்து
விடவேண்டும் அவ்வளதான்.மேற்கொண்டு ஒரு ரூபாய் கூட ஆட்டோகாரர் கேட்பதில்லை.சராசரியாக ஒரு கிலோமீட்டருக்கு ஜந்து ரூபாய் வருகிறது.
மிக நல்ல ஏற்பாடு அல்லவா...
                                        ஹோட்டல்கள்,தங்கும் விடுதிகள்
எர்ணாகுளத்திலேயே நிறைய ஹோட்டல்கள்,தங்கும் விடுதிகள் உள்ளன. ஹோட்டல்களில் இட்லி தவிர நம் ஊர் உணவுகள் அனைத்தும் கிடைக்கிறது
ஆனால் என்ன புரோட்டா ரூபாய் 7.00என்றால் அதற்கு தொட்டுகொள்ள சிக்கன் குருமா ரூ80.00க்கு வாங்கவேண்டும்.மற்றபடி தோசை,பூரிக்கெல்லாம்,
சாம்பார்.சட்னி உண்டு.தங்கும் விடுதிகளில் இரண்டுபேர் தங்கும் அறைக்கு ரூ400 வாங்குகிறார்கள் . அறையில் டிவி,பீரோ,சுத்தமான படுக்கைகள்,சுடுதண்ணீர்
எல்லாம் உண்டு.சீசன் காலங்களில் இதே அறைக்கு ரூ800 கூட வாங்குவார்கள் என நினைக்கிறேன்.எல்லா ஹோட்டல்களிலும் குடிப்பதற்கு சுடுதண்ணீறே
தருகிறார்கள்.எனவே சளியோ மற்ற உபாதைகளோ வரும் வாய்ப்பு குறைவு.ஊர் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது நம் சென்னைபோல.
                                               சில குறைகள்
குறைகள் என பார்த்தால் அங்கு உள்ள பஸ்கள் மிக பழைய மாடலாக உள்ளது.பஸ்நிலையம் சுத்தமும் சுமார்தான் [நம் ஊர் போலவே].மேலும் யாரிடமாவது
வழி கேட்டால் நாம் ஏதோ அவரிடம் கடன் கேட்பதுபோல் பார்க்கிறார்கள்.நம் ஆட்கள் எவ்வளவோ மேல்.ஆட்டோகாரர்கள் தான் வழி சொல்கிறார்கள்.மற்றபடி
சுற்றி பார்க்க வேண்டிய ஊர் தான் கொச்சி.
              

No comments: