Sunday, February 20, 2011

கானலும் காதலும்….

green-nature-wallpaperபடகுத்துறை படிக்கட்டுகளில் உன் பாதச்சுவடு  பார்த்ததாய் பறைசாற்றியது மீன் குஞ்சொன்று!

ஆவாரம் பூ  காட்டில் பூக்கள் கிள்ளிய தடயம்!

அடுத்த அலைக்காக தன்னைக்  காயவைத்து காத்திருக்கும் கறை!

புற்கள் பாத அழுத்தம் பட்டும் மறுநாளுக்கு காத்திருக்கிறது!

தெய்வம் வந்து நடனமாட காத்திருக்கும்  சித்திரை சபை!

கானகமெங்கும் கைகாட்டி பலகை இருந்தும் வந்தடையவில்லை நீ !!!                                     

4 comments:

சுதர்ஷன் said...

வாழ்த்துக்கள் ..சிந்தனைகள் வித்தியாசமாய் ..

//அடுத்த அலைக்காக தன்னைக் காயவைத்து காத்திருக்கும் கறை!//
:)

தமிழால் வளர்ந்தேன் - உலக தாய்மொழி தினம்

ஆதவா said...

கவிதை நன்றாக இருக்கிறது. முதல் கவிதையிலேயே முத்திரை பதித்துவிட்டீர்கள்.
//காயவைத்து காத்திருக்கும் கறை!///
”கறை” தான் கறையாக இருக்கிறது. கரைத்துவிடுங்கள்!

Philosophy Prabhakaran said...

உங்கள் இடுகைகள் சிலவற்றைப் பற்றி வலைச்சரத்தில் கொஞ்சம் எழுதியிருக்கிறேன்... நீங்கள் வந்து பார்த்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_22.html

Lee said...

பாதச்சுவடுகளில் மனம் பதித்து..
பார்த்தவேளைகளில் எனை மறந்து..
காத்திருந்த கண்களில் ஏக்கம் மறைத்து..
நினைக்கும்போதெல்லாம் நித்திரை கலைந்து..
இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வைப்பாய்?

உங்க கவிதைக்கு கவிதையா பாராட்டு சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா முடியலைப்பா..