எனக்கு ஏற்பட்ட அனுபவம் நம்மில் பலருக்கும் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.சில மாதங்களுக்கு முன்பு என் நண்பர்கள் இருவருக்கு அடுத்தடுத்த மாதங்களில் திருமணம் நடைபெற்றது அதற்கு அழைப்பிற்க்கு சென்றபோது பெற்ற அனுபவத்தை இங்கு பகிர்கிறேன்.
திருமணத்தில் முக்கிய அம்சமே யாரையும் விட்டுப்போகாமல் அழைக்க வேண்டும் என்பதே.எனவே நண்பர்கள் அனைவர் பெயரையும் ஒரு லிஸ்ட் எடுத்துக்கொண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை காரை கிளப்பினோம்.
முதலில் அருகில் உள்ள வீடுகளில் இருந்து ஆரம்பிப்போம் என்று முடிவு செய்து ஒரு நண்பன் வீட்டிற்குச் சென்றோம்.எங்களை வரவேற்ற நண்பன் மற்றும் அவனது மனைவியும் குடிக்க தண்ணீர் கொடுத்தார்கள் அப்போது காலை 7.00 மணி இருக்கும் பிறகு நண்பன் மனைவி நல்ல பெரிய கிளாசில் டீ கொண்டுவந்து கொடுத்தார் நாங்களும் ,வீட்டிலேயும் காபி குடிக்கவில்லை எனவே ஆனந்தமாக குடித்துவிட்டு {இன்று முழுவதும் டீ,காபி குடித்தே ஒரு வழி ஆகப்போகிறோம் என்று தெரியாமல்} பத்திரிக்கையை கொடுத்து கண்டிப்பாக வரவேண்டும் என சொல்லிவிட்டு வெளியே வந்து அடுத்த வீட்டிற்க்கு கிளம்பினோம்.
அங்கிருந்து 15 நிமிட தூரத்தில் இன்னொரு நண்பன் வீடு அங்கும் அவ்வாரே அவன் மனைவி பெரிய கிளாசை கையில் ஏந்தி வந்தார் நாங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டோம் மீண்டும் டீயா என என்ன செய்வது வேண்டாம் என சொன்னால் அவர்கள் உபசரிப்பை ஒதுக்கியதாக ஆகிவிடும்.சரி என்று ஆளுக்கொறு டம்ளரை எடுத்தோம் நல்லவேளை அதில் இருந்தது ஹார்லிக்ஸ் யப்பா தப்பித்தோம்.
வயிரெல்லாம் ஹாட் பிளாஸ்க் போல் இருந்தது.அங்கிருந்து 10நிமிட தூரத்தில் ஒரு நண்பன் வீடு.அங்கு சென்றவுடன் நண்பனிடம் டீ,காபி எதுவும் வேண்டாம் இப்போதுதான் நான்கு வீட்டில் சாப்பிட்டு வருகிறோம் என முதலிலேயே கூறி விடவேண்டும் என்று நாங்களாக பிளான்பன்னி சென்றோம்.விதி வலியது.அங்கே அப்படியே சொன்னோம்.அதற்கு அவன் எல்லாபக்கமும் சாப்பிடுவீர்கள் எங்கள் வீட்டில் சாப்பிட மாட்டீர்களா என்று நாங்கள் கெஞ்சியும் விடாமல் காபி கொடுத்தார்கள்.எங்கள் ஒவ்வருவரின் மூஞ்சியை பார்க்கவேண்டுமே…
மணி சுமார் 9.00 ஆகியிருந்தது,இவ்வாறே அன்று முழுவதும் போதும் போதும் எனும் அளவுக்கு நம் மக்கள் காபி,டீ {சில இடங்களில் சாப்பாடே} சாப்பிட வைத்தே பின்னிவிட்டார்கள்.
மாலை 5.30 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தோம் அப்போது நான் என்ன மக்கா டயர்டா இருக்கும் வண்டியை எங்காவது நிறுத்தி டீ,காபி சாப்பிடலாமா என்று,திரும்பினேன் பாருங்கள் மறுபடியும் டீ,காபியா ”டேய் என்று நண்பர்கள் என்னை கொல்ல பாய்ந்தார்கள்….
எனவே நண்பர்களே பத்திரிக்கை வைக்க போகும்போது இரண்டு வயிறுடன் செல்லுங்கள்.
1 comment:
Hahahha..
Post a Comment