Wednesday, February 9, 2011

மதுரை பேமஸ்……

பொதுவாக எனக்கு புத்தகம் படிப்பது எவ்வளவு பிடிக்குமோ அதேஅளவு சாப்பாடும் மிக பிடிக்கும்,பிடிக்கும் என்றால் விதவிதமான ஊர் சாப்பாடுகள் பிடிக்கும்.எந்த ஊரில் என்ன சாப்பாடு எந்த  கடையில் சிறப்பாக கிடைக்கும் என்பதை அறிந்து அங்கு சென்று அதை ஒரு முறையேனும் ருசித்துவிட வேண்டுமென்று எண்ணுவேன்.

அந்த வகையில் என்னிடம் பெரிய பட்டியலே உண்டு உ.ம்.தேனி நாகர் கடை முட்டை லாபா,விருதுநகர் பர்மா புரோட்டா,திருநெல்வேலி வைரமாளிகை நாட்டுக்கோழி சாப்ஸ் என்று அது ஒரு பெரிய லிஸ்ட் அந்த வரிசையில் மதுரையில் உள்ள சில் சிறப்பான உணவுகளை ஒருகை பார்த்துவிட வேண்டுமென்று நினைத்தேன்.

கவனியுங்கள் நான் இருப்பது திருப்பூரில் இங்கிருந்து மதுரைக்கு சுமார் 165 கி.மீ தூரம்.அதுவும் பைக்கில் சென்றேன்.

முதலில் திருமலை நாயக்கர் மஹால் சென்று பார்த்துவிட்டு அங்கிருந்து நேராக மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் இருந்து 25மீட்டர் உள்ள ஒரு ஹோட்ட்லில் மதுரை பேமஸ்{உலக பேமஸ்} ஜிகர்தண்டா வாங்கினேன் அடடா அந்த கலரும் வெண்ணிலா ஐஸ்கிரீமின் சுவையும்  சொல்ல வார்த்தைகளே இல்லை.ஒவ்வொரு வாயும் ருசித்து சாப்பிட்டேன் கிளாசை வைக்க மனமே இல்லை.10052010197

பிறகு அங்கிருந்து ஒரு தெரு சுற்றி வந்தால் மீனாட்சி பலகாரகடை அங்கு பாதாம் பால் சுடசுட.நான் நிறைய இடத்தில் பார்த்தவரை இப்படி ஒரு பாதாம் பால்  சாப்பிட்டதே இல்லை பாலாடை மிதக்க மிதக்க அருமையாக இருந்தது.10052010192

பிறகு அதன் அருகிலேயே ஒரு பையன் நெய்பணியாரம் ஊற்றுகிறான் நெய் என்றால் அவன் ஊற்றும் நெய் அளவை பார்த்தாலே கொலஸ்ட்ரால் இருப்பவர்ளுக்கு அது டபுளாகிவிடும்.ஆனால் அதன் சுவை அதையெல்லாம் பார்க்காது நெய்பணியாரம் அவ்வளவு அருமை.10052010193

நாக்கு தித்திப்பு சிறிது இடைவேளை கேட்டது சரி என்று அங்கிருந்து காந்தி மியுசியம் சென்று பார்த்துவிட்டு சிம்மக்கல் கோனார் கடையை நோக்கி என் வண்டி திரும்பியது.அங்கு என்க்கு ஏமாற்றம் காத்திருந்தது ஆம் கடை மாலைமுதல் தானாம்.

சரி என்று சாரதா மெஸ் தேடிப்பிடித்து அயிரைமீன் குழம்புடன் புல்மீல்ஸ் கட்டினேன்.10052010191

இதில் கவனிக்கபட வேண்டிய விசயம் என்னவென்றால் நம்பினால் நம்புங்கள் நான் இங்கிருந்து மதுரை சென்றது சாப்பிட மட்டும் தான் எனவே வாசல் வரை சென்றும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் கூட செல்லவில்லை என்றால் பார்த்துகொள்ளுங்கள்.10052010194

சாமி கும்பிடமாட்டேன் என்றாலும் மீனாட்சி அம்மன் கோயில் எனக்கு பிடிக்கும்.

வரும் காலங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு உணவுகளையும் தேடிப்போக எண்ணியுள்ளேன்.எனவே உங்களுக்கு தெரிந்த ஊர்களின் உணவுகளையும் சிறப்புகளையும் எனக்கு சிபாரிசு செய்யலாமே….

10 comments:

Sivakumar said...

>>> மதுரை ரயில் நிலையம் அருகே ஒரு பஜ்ஜி கடையில் மூன்று வித சட்னி தந்து அசத்தினார்கள். விலை ரூபாய் இரண்டு மட்டுமே. சென்னையில் வெறும் தண்ணி சட்னிதான். மதுரைக்கு வந்தா..உங்களோடதான் ஓசி சாப்பாடு.

Sivakumar said...

>>> திருப்பூர் வந்தாலும்!

ஆதவா said...

ஒவ்வொரு வாயும் ருசித்து சாப்பிட்டேன் ////

எத்தனை வாய்ங்க சாப்பிட்டீங்க???
படம் போட்டு நாக்குல தண்ணி ஊறவெச்சுட்டீங்க...

Anonymous said...

simmakkal konar kadaiyil enna famous endru sollvillaiye

டக்கால்டி said...

என்னே! உங்கள் லட்சியம்...
நல்ல இருக்கு பாஸ்...தொடருங்கள்...

karthi said...

ஆஹா! என்ன ஒரு லட்சியம் , gym master உன்ன gym பக்கம் பாத்தாரு........., பாத்தாரு.........., பாத்தாரு.........,

Unknown said...

நல்ல ரசிகன் தான் நீங்கள்..

Unknown said...

உங்கள் "லட்சிய" பயணம் சிறக்கட்டும்..

சத்ரியன் said...

அட சண்டாளங்களா! சாப்பிடறதுக்குன்னு மதுரைக்கா.....?

Lee said...

வாழத்தான் சாப்பிடனும். சாப்பிடுவதுக்காகவே வாழக்கூடாதுன்னு முடிவு பண்ணினேன். ஆனா படிச்சு முடிச்சவுடனே பசிக்குதே....